கோவை: அதிக கட்டணம்-நடத்துனருடன் வாக்குவாதம் - வீடியோ வைரல்!

கோவை: அதிக கட்டணம்-நடத்துனருடன் வாக்குவாதம் - வீடியோ வைரல்!
X
தனது உடமைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறி நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு.
கோவை, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் நோக்கி நேற்று அரசுப் பேருந்தில் பயணம் செய்த சிவா என்ற பயணி, தனது உடமைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறி நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிவா, தனது கைப்பையில் ட்ரில்லிங் உள்ளிட்ட கருவிகள் அடங்கிய சிறிய பெட்டியை வைத்திருந்தார். அதற்கு 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நடத்துனர் கூறியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மகளிருக்கு இலவச பயணம் என அறிவிக்கும் திமுக அரசு, இது போன்று லக்கேஜ் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிப்பது நியாயமா? என்று சிவா கேள்வி எழுப்பினார். மேலும், தினக்கூலிக்கு வேலைக்குச் செல்லும் நபர்களை இது போன்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கும் என்றும் அவர் வேதனை தெரிவித்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில், நடத்துனர், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தால் வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டியதாகவும், சிவா தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Next Story