ராமநாதபுரம் காவல்துறை சார்பில் நீர்நிலை பந்தல் திறப்பு

பஜார் போலீசார் பொதுமக்களின் தாகம் தீர்த்து வருகிறார்கள் சபாஷ் போலிஸ்
ராமநாதபுரத்தில் மாவட்டம் சுட்டு எரிக்கும் கடும் வெயிலால் அவதிப்படும் பொது மக்களுக்கு காவல்துறை சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு பொதுமக்கள் அமோக வரவேற்பு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடுமையான வெயில் சுட்டு எரித்து வருகிறது பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் கடுமையான அவதி அடைந்து வருகின்றனர் இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆலோசனையின் பெயரில் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தின் சார்பில் அரண்மனை பகுதியில் நிழலுக்குப் பந்தல் அமைக்கப்பட்டு நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது இங்கு வெயிலில் அவதி அடைந்து வரும் பொது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கு தாகம் தீர்க்கும் பானமாக நீர் மோர் தர்ப்பூசணி இளநீர் ஆகியவைகள் இலவசமாக காவல்துறை சார்பில் வழங்கப்பட்டு தாகம் தீர்த்து வருகின்றனர் காவல்துறை சட்ட ஒழுங்கு நிலை நாட்ட மட்டும் அல்ல சமூக அக்கறையோடு காவல்துறையின் கடுமையான பணிகளுக்கு மத்தியில் பணியின் நேரம் போக சமூக சிந்தனையோடு எடுத்துக்காட்டாக அரண்மனை பகுதியில் பொதுமக்களின் தாகம் தீர்த்து வருவது அனைவரின் வரவேற்பை பெற்று வருகிறது ராமநாதபுரம் பஜார் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி வருவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Next Story