கோவை: ஆளுநர் ரவி அடாவடியை தொடங்கியுள்ளார் - கு. ராமகிருஷ்ணன் !

கோவை: ஆளுநர் ரவி அடாவடியை தொடங்கியுள்ளார் - கு. ராமகிருஷ்ணன் !
X
ஆளுநர் ரவி, துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும்.
கோவை, காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இவை பல்கலைக்கழகங்கள் தொடர்பான முக்கிய மசோதாக்கள். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட போதிலும், ஆளுநர் ரவி மீண்டும் தனது அடாவடி நடவடிக்கைகளை மக்கள் மீது திணிக்கத் தொடங்கியுள்ளார். ஆளுநர் ரவி, துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவதாகவும், அதற்கு துணை ஜனாதிபதியை அழைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், சட்டமன்றச் சட்டங்களையும் மதிக்காத செயல் என்பதுடன், கல்வியில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டைப் பின்னுக்குத் தள்ளும் முயற்சியாகவும் உள்ளது. மேலும், கல்லூரிகளில் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிடச் செய்து, கல்வி நிறுவனங்களை காவிக் கூடாரமாக மாற்ற முயல்கிறார். இதன் மூலம் கல்வியைப் பின்னுக்குத் தள்ளுவதற்கு ஆளுநர் திட்டமிடுவதாகவும் கு.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். மேலும் இதைக் கண்டித்து ஊட்டியில் பேரணி போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
Next Story