தண்டவாளத்தில் போல்ட்கள் அகற்றம்: ரயில்வே போலீசார் ஆய்வு
திருவள்ளூர் : திருவாலங்காடு அருகே ரயில் தண்டவாளத்தில் நட்டு, போல்ட் கழற்றபட்டதை குறித்து ரயில்வே போலீசார் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில் தண்டவாளத்தில் லைன் மாறும் இடத்தில் எம்.பின் போல்ட் நெட், கழற்றப்பட்டு உள்ளது. இதனால் தண்டவாளம் துண்டிக்கப்பட்டு ரயில் கவிழ்ந்து விபத்துக குள்ளாகி நிலைய தவிர்க்கும் விதமாக ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு சிக்னலை துண்டித்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. தற்போது மோப்பநாய் ஜான்சி வரவழைக்கப்பட்டு 3 கி.மீ., தூரம் சம்பவ இடத்தில் ரயில்வே போலீசார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் ரயிலில் பயணித்த பயணிகளுக்கு அச்சமும் பதட்டமும் ஏற்பட்டது.
Next Story





