கூட்டுறவு வங்கி கடன் மோசடி குறித்து புகார் அளித்த இயக்குனருக்கு நேர்ந்த கொடுமை

கூட்டுறவு வங்கி கடன் மோசடி குறித்து புகார் அளித்த சினிமா திரைப்பட உதவி இயக்குனருக்கு நேர்ந்த கொடுமை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அவலம்
திருவள்ளூர் அருகே கூட்டுறவு வங்கி கடன் மோசடி குறித்து புகார் அளித்த சினிமா திரைப்பட உதவி இயக்குனருக்கு நேர்ந்த கொடுமை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அவலம் 354 நாட்களுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவு காரணமாக போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தனது குடும்பத்தினருடன் சொந்த வீட்டிற்கு வந்த சம்பவம் பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் கமல் சினிமா திரைப்பட உதவி இயக்குனராக பணிபுரிந்து வரும் இவர் தனது மனைவி திவ்யா மகன் எழில் வேந்தன் ஆகியோருடன் வசித்து வந்த நிலையில் அருகிலேயே இவரது தந்தை முருகன் அவரது மனைவி லோகேஸ்வரி மகன் விஷ்ணு ஆகியோருடன் மற்றொரு வீட்டில் வசித்து வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள 152 மீனவர்கள் மீன் வலை உதிரி பாகங்கள் வாங்குவதற்காக பனப்பாக்கம் கோளூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் மேலாளர் திருப்பதியிடம் அணுகி தாட்கோ மூலம் வங்கி கடன் பெற்றபோது நான்கு கோடியே 50 லட்சம் ரூபாயை முறையாக அனைவருக்கும் வழங்காமல் கிராமத்தில் உள்ள கட்டப்பஞ்சாயத்து செய்யும் பெண்ணைய் முருகன் புல்லு முருகன் நாராயணன் பரந்தாமன் உள்ளிட்ட 12 நபர்களுடன் சேர்ந்து முறைகேடு செய்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஜ்கமல் காவல்துறை மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல இடங்களில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் ராஜ் கமல் மற்றும் அவரது தந்தையின் வீட்டினை சேதப்படுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் மீன் பிடி படகு மீன் வலை உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியும் ராஜ்கமல் மற்றும் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் ஏழு பேரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட ராஜ் கமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிபதி வேல்முருகன் ராஜ் கமல் மற்றும் அவரது குடும்பத்தினரை மற்றும் வருவாய்த் துறையினர் காவல் துறையினர் பாதுகாப்புடன் எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் கடந்த 11 .11.2024 அன்று அறிவுறுத்திய நிலையில் நீதிமன்ற தீர்ப்பை முறையாக அமல்படுத்தாமல் இருந்த நிலையில் நந்தியம்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த ராஜ்கமல் அவரது குடும்பத்தினரை இன்று பொன்னேரி கோட்டாட்சியர் கனிமொழி அறிவுறுத்தலில் பொன்னேரி திருப்பாலைவனம் காவல்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் பழனி ஆகியோர் இன்று அவர்களை போலீசார் பாதுகாப்புடன் மீண்டும் ஊருக்குள் நிரந்தரமாக வசிப்பதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர் தொடர்ந்து அவர்கள் குடும்பத்திற்கு இரண்டு போலீசார் வீட்டின் முன்பாகவும் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்ட திருப்பதி மற்றும் ஊரைவிட்டு ஒதுக்கி கட்டப்பஞ்சாயத்து மேற் கொண்ட 13 பேர் மீது போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்ய வேண்டுமெனவும் தொடர்ந்து தங்களது இரு குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பினை காவல்துறையினர் வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட சினிமா உதவி இயக்குனர் ராஜ்கமல் கோரிக்கை விடுத்துள்ளார் சினிமா திரைப்பட உதவி இயக்குனர் ராஜ்கமல்தப்பு தண்டா ரூட்டு நம்மகதை கருப்பர் நகர் பேரழகி ISO போன்ற திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது பழவேற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது
Next Story