பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கிடந்த தங்க மோதிரம் காவல்துறையினரிடம் ஒப்படைப்பு

X
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை ஸ்கேன் பிரிவு அருகே கடந்த வாரம் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 4 கிராம் தங்க மோதிரம் கீழே கிடந்தது. மோதிரத்தை கேட்டு யாரும் வராததால் மருத்துவமனை கண்காணிப்பாளர் மோதிரத்தை தென்கரை இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்திடம் நேற்று (ஏப்.24) ஒப்படைத்தார். மோதிரத்தை தொலைத்தவர்கள் உரிய ஆவணங்கள் மூலம் தென்கரை காவல் நிலையத்தை அணுகினால் மோதிரம் வழங்கப்படும் என இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.
Next Story

