ஆண்டிபட்டி பகுதியில் கத்தரிக்காய் விலை குறைவால் விவசாயிகள் வேதனை

X
ஆண்டிபட்டி பகுதியில் அணைக்கரைப்பட்டி, மூனாண்டிபட்டி, ராஜதானி, புள்ளிமான்கோம்பை உட்பட பல கிராமங்களில் கத்திரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் கத்தரிக்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. சில வாரங்களுக்கு முன் கிலோ ரூ.30 முதல் 40 வரை இருந்த கத்தரிக்காய் விலை தற்போது கிலோ ரூ.10 வரை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story

