கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

பிஎஸ்என்எல் அலுவலகம் அருகாமையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகாமையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டம் தமிழக ஆளுநர் ரவி மற்றும் சட்ட மீறலுக்கு துணை போகும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரையும் கண்டித்து இன்று ஏப்ரல் 25 காலை 11:30 மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாக குழு மாவட்ட செயலாளர் சிபிஐ கலைச்செல்வம் தலைமை வாங்கினார் மற்றும் கண்டன உரையாக முன்னாள் எம்எல்ஏ நஞ்சப்பன், மற்றும் மாநில நிர்வாக குழு சிபிஐ தேவரசன்,மாவட்ட துணைச் செயலாளர் சி பி ஐ தமிழ் குமரன், மாவட்ட துணைச் செயலாளர் மாதேஸ்வரன் சிபிஐ மாவட்ட செயலாளர்கள் விவசாய சங்கம் மாநில குழு சிபிஐ சின்னசாமி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story