மதுராந்தகம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் சக ஊழியர் மீது தாக்குதல்

X
மதுராந்தகம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் வெளியாட் களை வைத்து வியாபாரம் செய்வதை தட்டி கேட்ட சக ஊழியர் மீது தாக்குதல் செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த கீழவலம் பகுதியில் கடை எண் 4473 அரசு மதுபான கடை இயங்கி வருகின்றது. இந்த மதுபான கடையில் நான்கு ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர் கடையில் பணி புரியும் சக ஊழியர் ஒருவர் கூலி வேலைக்கு எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் முறைகேடாக வெளி ஆட்களை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை தட்டி கேட்ட சக ஊழியர் பாரதியை வெளியாட்களை மற்றும் சக ஊழியர் தாக்கி உள்ளனர் இதனை மது வாங்க வந்த ஒருவர் அரசு மதுபான கடையில் சக ஊழியரை அதே கடையில் பணிபுரியும் ஒருவர் தாக்குவதை வீடியோ எடுத்துள்ளார். தற்பொழுது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது சிசிடிவி காட்சிகளும் பரவி வருகிறது.இது குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

