கோவை: திமுக அமைச்சர்கள் மற்றும் அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் !

கோவை செஞ்சிலுவை சங்க அலுவலகம் முன்பு கோவை மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் திமுக அரசை கண்டித்தும் அமைச்சர் பொன்முடியை பதவி விலகக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை செஞ்சிலுவை சங்க அலுவலகம் முன்பு கோவை மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் திமுக அரசை கண்டித்தும் அமைச்சர் பொன்முடியை பதவி விலகக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் நடிகை விந்தியா பேசியதாவது, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சி காலங்களில் பெண்களின் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் மகளிர் காவல் நிலையம் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் அமைக்கப்பட்டது. இன்றைக்கு திமுக ஆட்சியில் கல்லூரி மாணவிகள் முதல் முதியோர் வரை யாரும் பாதுகாப்பாக இல்லை. பாலியல் தொல்லையால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் சாபம் பொல்லாதது. திமுக ஆட்சி இன்னும் பத்து மாதம் தான். விடியல் தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த இவர்கள் என்ன சாதனை செய்தார்கள்? திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவித நலத்திட்டங்களும் மேற்கொள்ளவில்லை. வேதனை தான் மிஞ்சுகிறது என கூறினார்.
Next Story