போடி : பேருந்து மோதியதில் ஒருவர் பலி ஓட்டுனருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை

X
தேவாரத்தை சேர்ந்த பெரியசாமி 2018-ல் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது வழியாக வந்த தனியார் பஸ் பெரியசாமி மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். தனியார் பஸ் ஓட்டுனர் பகவதியை கைது செய்த நிலையில் இந்த வழக்கு விசாரணை போடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (ஏப்.24) பகவதிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு.
Next Story

