மலேரியா ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

மலேரியா ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
X
மலேரியா ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
ஏப்ரல் 25ஆம் தேதி உலக மலேரியா தினம் இந்த தினத்தை முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகளில் உலக மலேரியா தின உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமையில் திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் அருள் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் உலக மலேரியா தின உறுதிமொழியை ஏற்றனர் இந்த உறுதிமொழியில் வீட்டிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ யாருக்கேனும் காய்ச்சல் என தெரிந்தவுடன் அவர்களை ரத்தப் பரிசோதனை செய்யுமாறு வலியுறுத்தவும் மலேரியா காய்ச்சல் என உறுதி செய்தவுடன் அவர்களை பூரண சிகிச்சை எடுத்துக் கொள்ள வலியுறுத்துவேன் என்றும் மலேரியா நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் மாதம் தோறும் ரத்த தடவல் எடுத்து மலேரியா இல்லை என உறுதி செய்தும் ஒரு வருடம் வரை தொடர் கண்காணிப்பில் இருக்க செய்வேன் என்றும் தண்ணீரை சேமித்து வைக்கும் மேல்நிலை தொட்டிகள் கீழ்நிலை தொட்டிகள் சிமெண்ட் தொட்டிகள் மற்றும் கிணறுகளை கொசு புகா வண்ணம் மூடி வைப்பேன் என்றும் அரசு மேற்கொள்ளும் மலேரியா நோய் கண்காணிப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் அவற்றை மேற்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்றும் மலேரியா நோயை பரவலை இந்தியாவில் 2027இல் முற்றிலுமாக ஒழித்து 2030ல் மலேரியா நோய் இல்லாத நாடு என்ற இலக்கினை அடைய பாடுபடுவேன் என்றும் உறுதிமொழி வாசிக்கப்பட்டது இந்த உறுதிமொழியை ஊழியர்களும் துப்புரவு தொழிலாளர்களும் வழிமொழிந்து வாசித்தனர்
Next Story