காளியம்மன்கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்

இண்டூர் நத்தஅள்ளி காளியம்மன்கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ளது நத்தஅள்ளி. இந்த கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கோயிலின் தேரோட்டத்திற்காக ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 7 மணியளவில் கோயிலில் வாஸ்து ஹோமம் மற்றும் சாந்தி ஹோமம் நடந்தது.தேர் வெள்ளோட்ட அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம், நவக்கிரக சாந்திஹோமம், லட்சுமி ஹோமங்களும் இதை தொடர்ந்து கோபூஜையும் நடந்தது. காளியம்மனுக்கு விசேஷ அலங்காரமும் சிறப்பு பூஜைகளும் நடந்தது. புதிய தேரை 18 ஊரை சேர்ந்த ஊர்கவுண்டர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகி யோர் வடம்பிடித்து இழுத்து தேரை நிலைபெயர்த்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனை வழிபட்டனர். வெள்ளோட்ட நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை பங்காளிகள், பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story