போக்சோ கைதி சிறைக்கு அழைத்து சென்றபோது தப்பி ஓட்டம்

போக்சோ கைதி சிறைக்கு அழைத்து சென்றபோது தப்பி ஓட்டம்
X
செம்பட்டியை சேர்ந்த போக்சோ கைதி சிறைக்கு அழைத்து சென்றபோது தப்பி ஓட்டம்
திண்டுக்கல் செம்பட்டி அருகே போடிக்காமன்வாடியை சேர்ந்த வினித் (25) சில மாதங்களுக்கு முன் 13 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செம்பட்டி போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த செம்பட்டி போலீசார் சிறையிலிருந்து டூ வீலரில் அழைத்து சென்று நிதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் மீண்டும் சிறையில் அடைக்க டூ வீலரில் அழைத்து சென்றபோது அஞ்சலி ரவுண்டானா பகுதியில் வந்தபோது டூ வீலரில் இருந்து குதித்து தப்பி ஓடினார். தப்பி ஓடிய வினித்தை செம்பட்டி காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story