குமரியில் "நிமிர்" விழிப்புணர்வு பிரச்சாரம்

X
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் "நிமிர்" என்ற போக்சோ விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை இன்று தொடங்கி வைத்தார். போக்சோ குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை போலீசார் சந்தித்து அவர்களுக்கு தேவையான சட்ட உதவி, இழப்பீடு தொகையை பெற்றுதருதல், அவர்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்டுதல் மேலும் போக்சோ குற்றங்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தோடு ஒவ்வொரு கிராமங்களிலும் போக்சோ குற்றங்கள் தொடர்பான குற்றங்களையும் அதற்குண்டான மரண தண்டனை வரை உள்ள தண்டனைகளையும் அதனால் ஏற்படும் அவமானம் மற்றும் கெடுதல்களை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். போக்சோ குற்றங்கள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை இத்திட்டம் உருவாக்கும். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுஜாதா மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

