ஶ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவிலில்  விழா துவக்கம் 

ஶ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவிலில்  விழா துவக்கம் 
X
வெள்ளையந்தோப்பு
கன்னியாகுமரி அருகே  வெள்ளையந்தோப்பு ஊர் ஶ்ரீமன் நாராயணசாமி திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழா இன்று  குடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு பணிவிடையும் 6:30 மணிக்கு திரு கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிலிருந்து புதிதாக செய்யப்பட்ட காளை வாகனம், சர்ப்ப வாகனம், மயில்வாகனம் ஆகிய மூன்று வாகனங்களையும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஊர்வலமாக கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.        இந்த ஊர்வலத்தை சுவாமி தோப்பு பூஜிதகுரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் துவக்கி வைத்தார்.
Next Story