தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

X
குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் அரசியல் சட்டத்திற்க்கு எதிராக துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டி அரசமைப்பு சிக்கலை உருவாக்கவும் ,மனுதர்ம சட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கின்ற தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. ஆர்பாட்டத்திர்க்கு குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தா.சுபாஷ் சந்திர போஸ் தலைமை தாங்கினார். பொருளாளர் பி.தாமரைசிங் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்ட போராட்டத்தை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே.கங்கா துவக்கி வைத்தார். போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் எஸ்.அனில்குமார் முடித்து வைத்தார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

