அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம். தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி.

அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம். தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி.
அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம். தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி. கடந்த 2022-2023 கல்வி ஆண்டில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் அரசு கலை அறிவியல் கலை கல்லூரி துவங்கப்பட்டு, தொடர்ந்து கல்லூரி நடைபெற்று வருகிறது. தற்போது வரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த கல்லூரிக்கு நிரந்தரமாக கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் ரூபாய் 17.50 கோடி ஒதுக்கி, கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டப்படும் என அறிவிப்பு செய்தது இன்று. இந்த செய்தியை கேள்விப்பட்ட இக்கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவியர்கள், பேராசிரியர்கள், கல்லூரியின் முதல்வர் ஆகியோர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
Next Story