திப்பணம்பட்டியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

திப்பணம்பட்டியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது
X
கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், பாவூா்சத்திரம் கண்தான விழிப்புணா்வுக் குழு, அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, அரிமா சங்கச் செயலா் தங்கராஜ் தலைமை வகித்தாா். கண்தான விழிப்புணா்வுக் குழு பொருளாளா் இரா. சந்திரன், இணைச் செயலா் ரஜினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா்கள் ராம்குமாா், சுமலதா ஆகியோா் முகாமைத் தொடக்கிவைத்தனா். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் கிரிஷ்மா, கீா்த்தனா ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா். 12 போ் இலவச கண் அறுவை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அரிமா சங்கச் செயலா் (தோ்வு) பரமசிவன் வரவேற்றாா். கனகராணி நன்றி கூறினாா். கண் தான விழிப்புணா்வுக் குழு நிறுவனா் கே.ஆா்.பி. இளங்கோ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை மதியழகன் செய்திருந்தாா்.
Next Story