சாலையோரத்தில் ஊர்ந்து சென்ற நட்சத்திர ஆமை மீட்பு

X
சாத்தான்குளம் அருகே சாலையோரத்தில் ஊர்ந்து சென்ற நட்சத்திர ஆமையை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சங்கரன்குடியிருப்பு விலக்கில் கெபி உள்ளது. இங்குள்ள டீ கடை அருகே நேற்று இரவு 7 மணி அளவில் ஆமை ஒன்று ஊர்ந்து சென்றது. இதையடுத்து கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள், ஆமையை பார்வையிட்டனர். இதில் அந்த ஆமை, நட்சத்திர வகை ஆமை என்பது தெரியவந்தது. இந்த ஆமை புதர் காடுகள் மற்றும் வறண்டப் பகுதிகளில் காணப்படுமாம். இந்த இனம் கவர்ச்சியான செல்லப்பிராணி வர்த்தகத்தில் மிகவும் பிரபலமானது. கடற்கரை பகுதியில் காணப்படும் இந்த வகை ஆமை, இங்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை. சாத்தான்குளம்- திருச்செந்தூர் சாலையில் ஆமை, சிக்கியதால் வாகனங்களில் கொண்டு செல்லும்போது தவறி விழுந்ததா? அல்லது வேறு யாரும் கொண்டு வந்தார்களா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து பொதுமக்கள், அதே பகுதி சோதனை சாவடியில் நின்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், போலீசார் சின்னத்துரை, குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து திருச்செந்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையில் இருந்து வனவர் ஜெயசேகர் இன்று காலை சம்பவ இடம் வந்து நட்சத்திர ஆமையைமீட்டு கடல் பகுதியில் கொண்டுவிட நடவடிக்கை மேற்கெண்டனர். அப்போதுசிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், போலீசார் சின்னத்துரை குமார் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story

