ஸ்ரீஅழகிய கூத்தர் கோயிலில் திருவாசக முற்றோதுதல் வேள்வி

ஸ்ரீஅழகிய கூத்தர் கோயிலில் திருவாசக முற்றோதுதல் வேள்வி
X
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் ஸ்ரீஅழகிய கூத்தர் கோயிலில் திருவாசக முற்றோதுதல் வேள்வி இன்று நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் ஸ்ரீஅழகிய கூத்தர் கோயிலில் திருவாசக முற்றோதுதல் வேள்வி இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தர் திருக்கோயிலில் திருநெல்வேலி சிவநெறி மணிவாசகர் அருட்பணி மன்றத்தினர் சார்பில் திருவாசக முற்றோதுதல் வேள்வி பூஜை இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு காலை 9 மணிமுதல்திருநெல்வேலி சிவநெறி மணிவாசகர் அருட்பணி மன்றத்தினரின் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. பகல் 10. மணி முதல் அபிஷேகம் தொடங்கியது. பகல் 12.00 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பகல் 1.00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜ பிள்ளை தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story