புளியங்குடியில் அதிமுக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

புளியங்குடியில் அதிமுக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது
X
அதிமுக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது
பெண்களை அமைச்சா் பொன்முடி இழிவாகப் பேசியதாகக் கூறி கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தென்காசி வடக்கு மாவட்ட மகளிரணிச் செயலா் சத்யா தீபக் தலைமை வகித்தாா். மருத்துவரணி துணைச் செயலா் டாக்டா் துரையப்பா, மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், மாவட்ட அவைத்தலைவா் வி.பி. மூா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கிட்டுராஜா, ஒன்றியச் செயலா்கள் சுசீகரன், பெரியதுரை,ஜெயகுமாா், கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே. முருகன், எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் ராசி சரவணன் உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டனா். நகரச் செயலா் சங்கரபாண்டியன் வரவேற்றாா். மாவட்ட மகளிரணி துணைத் தலைவா் கோமதி நன்றி கூறினாா்.
Next Story