பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் அடுக்கடுக்கான புகார் வைத்த தேனி மாவட்ட விவசாயி
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இதில் தேனி மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகள் குறித்தும் கோரிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர் இந்தக் கூட்டத்தில் ராயப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தங்களது கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ஆட்டோவில் வைத்து ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவதாகவும் இது குறித்து விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மேலும் கூட்டுறவுத் துறையில் தங்களது கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தால் உரிய பதில் கொடுக்காமல் அதிகாரிகள் 25 ஆயிரம் ரூபாய் பணம் கேட்கிறார்கள் உத்தமபாளையம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் காரில் வந்து பணம் பெற்று செல்கின்றனர் என்னிடம் ஆதாரம் உள்ளது எனவே அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் பின் இது குறித்து மாவட்ட ஆட்சியர் அவரிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்
Next Story



