டூவீலர் மோதி கட்டிட மேஸ்திரி விபத்தில் உயிரிழப்பு.

டூவீலர் மோதி கட்டிட மேஸ்திரி விபத்தில் உயிரிழப்பு.
X
டூவீலர் மோதி கட்டிட மேஸ்திரி விபத்தில் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் தொட்டதிம்மனஅள்ளி ஊராட்சி கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (48) கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் மாலை டீக்கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். பின்னர் அவர் மொள்ளம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக நடந்து சென்ற ராஜா மீது டூவீலர் எதிர் பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story