அரியலூரில் வருவாய் துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

X
அரியலூர், ஏப்.25- அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத் துறை உள்ளிட்ட அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவை துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர் பணித்தன்மையை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும் அரசு பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நிலைகளை முழுமையாக கைவிட்டு அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறை சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story

