காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

X
அரியலூர் - காஷ்மீர் சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் மீது நேற்று முன்தினம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டனர் இது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையும் வகையிலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அரியலூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொது குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர் இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு தங்களது கண்டனங்களையும் தெரிவித்துக் கொண்டனர்
Next Story

