துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்திட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

X
நீலகிரி மாவட்டம் உதகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும் மதிக்காமல் தமிழக ஆளுநர் ஆர் .என். ரவி இன்று உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்திட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் அவருக்கு துணை போகும் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை கண்டித்து உதகை காபி ஹவுஸ் பகுதியில் கருப்புக் கொடியுடன் திராவிட தமிழர் கட்சி சார்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி உட்பட 70க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர் போராட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் துணைவேந்தர் மாநாட்டில் 52 துணை வேந்தர்களின் கலந்து கொள்ள வேண்டியவர்கள் தற்போது 32 - துணைவேந்தர்கள் மட்டும் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் துணை வேந்தர் மாநாட்டில் 20 துணை வேந்தர்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story

