ராசிபுரத்தில் டிப்பர் லாரி, பைக் மீது மோதி விபத்து: ஒருவர் பலி..

X
Rasipuram King 24x7 |25 April 2025 9:06 PM ISTராசிபுரத்தில் டிப்பர் லாரி, பைக் மீது மோதி விபத்து: ஒருவர் பலி..
ராசிபுரம் அருகே உள்ள அத்திபலகானுர் அருகே, டிப்பர் லாரி, பைக் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வெண்ணந்தூர் ஒன்றியம் நெ.3. கொமராபாளையம் பஞ்., கோம்பைக்காடு பகுதியை சேர்ந்தவர் சிரங்கன் மகன் ராமசாமி, 65. கூலித் தொழிலாளி. அவரது பேத்தி சிறுமி லாவண்யா, 16. பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டு உறவினர் வீட்டில் விடுவதற்காக எக்ஸெல் டி.வி.எஸ்., வாகனத்தில் ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அதே நேரத்தில் தொட்டி வலசு பகுதியில் இருந்து கட்டனாச்சம்பட்டி நோக்கி டிப்பர் லாரி எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்தது அப்போது, எதிர்பாராத விதமாக அத்திபலகானுர் அருகே, பைக்கின் மீது மோதியது. இதில், பைக்கை ஓட்டி வந்த ராமசாமி மீது டிப்பர் லாரியின் பின் சக்கரம் ஏரி இரண்டு கால்களும் பலத்த சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக சிறுமி லாவன்யாவுக்கு சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார். பலத்த காயமடைந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
Next Story
