ராசிபுரத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம்..

X
Rasipuram King 24x7 |25 April 2025 9:11 PM ISTராசிபுரத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம்..
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அலுவலக வெளிநடப்பு மற்றும் ஆர்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கோமதி தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கிராம ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செந்தாமரை கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் வருவாய்த்துறையினருக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். தற்காலிக, தொகுப்பூதிய நியமனங்களை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடந்தது. முடிவில் அ.ராணி நன்றி கூறினார். இதில் வருவாய்த்துறையினர் பலரும் பங்கேற்றனர்.
Next Story
