விருதுநகரில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வட்ட கிளைச் செயலாளர் மாயகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ...*

X
விருதுநகரில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வட்ட கிளைச் செயலாளர் மாயகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ... விருதுநகரில் உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வட்டக் கிளை செயலாளர் மாயகிருஷ்ணன் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ,நில அளவை துறை, உள்ளிட்ட அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை காக்கும் வகையில் சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும், பொது மக்களுக்கான பணியை மேலும் சிறப்பாக செய்திட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப் பணியிடங்களையும் விரைந்து நிரப்பிட வேண்டும், வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதீதமான பணி நெருக்கடி ஏற்படுத்துவது தொடர்பாகவும் குறிப்பாக களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முற்றாக கைவிட வேண்டும், வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை அடிப்படையில் நிறைவேற்றிட முதலமைச்சர் உத்திரவிடவேண்டும், உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story

