மொழி பிரச்சனையை கிளப்புவதும், இனப்பிரச்சினை கிளப்புவதும் செய்த தவறுகளை மறைப்பதற்காக மற்றவர்களை தூண்டிவிட்டு திமுக தப்பிக்க பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மொழி பிரச்சனையை கிளப்புவதும், இனப்பிரச்சினை கிளப்புவதும் செய்த தவறுகளை மறைப்பதற்காக மற்றவர்களை தூண்டிவிட்டு திமுக தப்பிக்க பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
X
மொழி பிரச்சனையை கிளப்புவதும், இனப்பிரச்சினை கிளப்புவதும் செய்த தவறுகளை மறைப்பதற்காக மற்றவர்களை தூண்டிவிட்டு திமுக தப்பிக்க பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் பேச்சு..*
திமுகவினர் மத்திய அரசிடம் தேவையில்லாமல் சண்டையை இழுப்பதும் கொடுத்த நிதியை வாங்கி சரியான திட்டங்களை செயல்படுத்தாமல் மொழி பிரச்சனையை கிளப்புவதும், இனப்பிரச்சினை கிளப்புவதும் செய்த தவறுகளை மறைப்பதற்காக மற்றவர்களை தூண்டிவிட்டு திமுக தப்பிக்க பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் பேச்சு.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றியம் மற்றும் ராஜபாளையம் தொகுதி சார்பில் வன்னியம்பட்டியில் வைத்து பூத் கமிட்டி மற்றும் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் மயில்சாமி ஏற்பாட்டிலும் முன்னாள் அமைச்சர்,கழக அமைப்புச் செயலாளர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் முத்துராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிய போது.. அண்ணா திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டுகின்ற பணியை செய்கின்றவர்கள் திமுக கட்சியினர். திமுகவால் பிள்ளை பெற்று பெயர் வைப்பது கிடையாது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சாலைகள் குடிநீர் பைப் லைன்கள் இந்த பல்வேறு திட்டங்களில் கொண்டு வந்ததில் திமுகவினர் கல்வெட்டுகளை பதித்து அவர்களது பெயர்களை போட்டுக் கொள்கிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடியாரின் முயற்சியால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி, பேரூராட்சிகள், ராஜபாளையம் நகராட்சிகள், பேரூராட்சிகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து தரமான பைப்புகளை வைத்து குடிநீர் சப்ளை செய்தோம். தற்போது திமுக ஆட்சியில் போடப்படும் பைப்புகளை கைகளில் அழுத்தினால் உடைந்து விடும் பைப்பில் ஊழல், குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழல், சாக்கடை அள்ளுவதில் ஊழல்,குப்பை அள்ளுவதில் ஊழல். திமுக ஆட்சியில் ஊழல் மட்டுமே நடைபெறுகிறது வேலை ஒன்றும் நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் மூன்று வருடம் கவுன்சிலராக இருந்தவர்கள் மிகப்பெரிய வீடு கட்டுகிறார்கள் லஞ்சம் வாங்கி பிழைக்கின்றவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் அதிமுக ஆள வேண்டும் எடப்பாடியார் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக வரவேண்டும். அனைவரும் நேசிக்கின்றவர், அற்புதமானவர், ஏழைகளை கரம் தூக்கி உயர்த்தக்கூடிய மனிதர் எடப்பாடியார் இல்லாத மக்களுக்கு அள்ளிக் கொடுப்பவர்தான் தலைவன். திமுகவினர் இருப்பவர்கள் இடத்தில் புடுங்குவதும் இல்லாதவர்களிடம் அடித்து விரட்டுவதும் நல்ல தலைவனுக்கு அழகல்ல.தமிழகத்தில் திமுக ஆட்சியின் மீது மக்களிடம் வெறுப்பு அலை வந்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடியார் 11 மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசிடம் இருந்து வாங்கித் தந்தார். மத்திய அரசிடம் தமிழ்நாட்டிற்கு தேவையான உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றவர் என்ற பெருமைக்குறிய முதலமைச்சராக விளங்கியவர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள். திமுகவினர் மத்திய அரசிடம் தேவையில்லாமல் சண்டையை இழுப்பதும் கொடுத்த நிதியை வாங்கி சரியான திட்டங்களை செயல்படுத்தாமல் மொழி பிரச்சனையை கிளப்புவது, இனப்பிரச்சினை கிளப்புவது செய்த தவறுகளை மறைப்பதற்காக மற்றவர்களை தூண்டிவிட்டு மதப் பிரச்சனையும் மொழி பிரச்சனையும் வைத்து திமுக தப்பிக்க பார்க்கிறது. அண்ணா திமுக மட்டும் தான் ஏழைகளுக்கான இயக்கம்.,அண்ணா திமுகவில் இருப்பவர்கள் மட்டும்தான் இன்றைக்கு நல்ல இடத்தில் இருக்கிறார்கள். அண்ணா திமுகவை நம்பி வந்தவர்கள் யாரும் கெட்டதாக வரலாறு கிடையாது உழைக்கின்ற மக்களை கரம் தூக்கி விடுபவர் எடப்பாடியார். அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை சவால் விட்டு எங்களால் சொல்ல முடியும் திமுகவால் சாதனைகளை சொல்ல முடியுமா ? என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
Next Story