தஞ்சாவூரில், நவீன செல்லிடப் பேசி வழங்கிட மாற்றுத்திறனாளிகள் தேர்வு 

தஞ்சாவூரில், நவீன செல்லிடப் பேசி வழங்கிட மாற்றுத்திறனாளிகள் தேர்வு 
X
மாற்றுத்திறனாளிகள்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத, கண் பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செல்லிடப் பேசி வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வுப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.  இதனை, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்தேர்வில் காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத 55 மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண்பார்வை குறைபாடுடைய 33 மாற்றுத்திறனாளிகள் என பயனடைய உள்ள மொத்தம் 88 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.             இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜி.அருள்பிரகாசம், மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ஜி.குழந்தைவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story