ஊரகத் திறனாய்வு தேர்வில் பேராவூரணி பெண்கள் பள்ளி மாணவிகள் சாதனை

X
தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 25 அன்று ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். வருவாய் மாவட்ட அளவில் 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பெற்று, ஆண்டுக்கு ரூபாய் 12 ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு கல்வித் உதவித்தொகை வழங்கப் பெறுகிறது. இந்த தேர்வில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அபிநயா, யாழினி, கலைமதி, பிரசன்யா ஆகியோர் தேர்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் அபிநயா என்ற மாணவி தஞ்சை மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் முதலிடத்தை பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
Next Story

