வேலை நிறுத்த ஆயத்த மாநாடு கூட்டம்

X
அகில இந்திய பொது வேலை ஆயத்த மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல்லில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்த போராட்டம் மே 20ல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சில் செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். சி ஐ டி யு மாவட்ட செயலாளர் ஜெயசீலன் வரவேற்றார். எல் பி எஃப் மாநில அமைப்பு செயலாளர் தர்மன், சிஐடியு மாநில துணைத்தலைவர் சந்திரன், ஏஐடியுசி மாநில தலைவர் காசி விஸ்வநாதன், எச்எம்எஸ் மாநில தலைவர் கண்ணன், ஏஐசிசிடியு தேசிய செயற்குழு உறுப்பினர் பால்ராஜ், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் கண்ணன், யுடியுசி மாவட்டச் செயலர் தங்க பெருமாள் சிறப்புரை ஆற்றினர். மாநாட்டில், தொழிலாளர் விரோத கார்ப்பரேட் ஆதரவு சட்டத் தொகுப்புகள் நான்கையும் அமலாக்குவதை நிறுத்த வேண்டும். பொதுத்துறை சொத்துக்களை விற்பதை நிறுத்த வேண்டும். தொழிலாளர் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டுக்கு தர வேண்டியது நிதியை உடனடியாக தர வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு சங்க நிர்வாகிகள் போக்குவரத்துக் கழக தொமுச பொதுச் செயலாளர் பொன் செந்தில், பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பஜூலுல் ஹக், சி ஐ டி யு மாவட்ட தலைவர் கே.ஆர்.கணேசன், ஏஐடியுசி கௌரவ தலைவர் சந்திரமோகன், தொமுச கவுன்சில் தலைவர் சென்ராயன், முருகன், சையது இப்ராஹிம், ரவி, செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏஐடியுசி மாவட்ட தலைவர் பாலன் நன்றி கூறினார்.
Next Story

