ரோந்து பணிகளில் நக்சல் தடுப்பு அதிரடிப்படை போலீசார்

ரோந்து பணிகளில் நக்சல் தடுப்பு அதிரடிப்படை போலீசார்
X
காஷ்மீர் தாக்குதல் எதிரொலியால் வட்டக்கானல் வெள்ள கெவி பகுதியில் ரோந்து பணிகளில் நக்சல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் குவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தமிழ்நாட்டின் முக்கிய மலைவாசஸ்தலமாக உள்ளது. இந்நிலையில் வெளிநாட்டினர் அதிகம் தங்கக்கூடிய வட்டகானல் மற்றும் வெள்ள கெவி கிராமம் வழியாக உள்ள வனப்பகுதிகளில் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் நக்சல் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் பஹல்காம் என்ற பிரபல சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடியிருந்த இடத்தில் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர் இதனையடுத்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பானது. மேலும் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனைகளை பலப்படுத்தி வருகின்றனர் . கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் கொடைக்கானலில் முக்கியமாக வட்டக்கானல் என்ற பகுதியில்தான் அதிக அளவிலான வெளிநாட்டவர்கள் விரும்பி வந்து தங்குகின்றனர். குறிப்பாக இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருடத்திற்கு மூன்று மாதங்கள் கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதியில் தங்கி இருப்பார்கள் ஆனால் இஸ்ரேல் நாட்டு போருக்கு பிறகு இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. தற்போது வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கிருக்கக்கூடிய இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு வட்டக்கானல் பகுதியில் தங்குவது வழக்கம் வெளிநாட்டவர்கள் அதிகமாக வருவதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வட்டக்கானல் முக்கிய பகுதியாக இருக்கிறது மேலும் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளும் வட்டக் கானல் பகுதிக்கு அதிகமாக வருகின்றனர். இந்நிலையில் அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தி வரக்கூடிய நிலையில் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இன்று நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கியுடன் வட்டக் கானலில் ரோந்து மேற்கொண்டு வட்ட கானலிலிருந்து வனப்பகுதிகள் வழியாக பழமை வாய்ந்த வெள்ளை கவி கிராமம் வழியாக கும்பக்கரை அருவி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் நக்சல் பிரிவு அதிரடிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story