கிணற்றில் தவறி விழுந்த நபரை உயிருடன் மீட்ட ஆத்தூர் தீயணைப்பு துறையினர்

கிணற்றில் தவறி விழுந்த நபரை உயிருடன் மீட்ட ஆத்தூர் தீயணைப்பு துறையினர்
X
காமலாபுரம் அருகே தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்த நபரை உயிருடன் மீட்ட ஆத்தூர் தீயணைப்பு துறையினர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா காமலாபுரம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் ஆண் ஒருவர் தவறி விழுந்து விட்டதாக ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஆத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தவறி விழுந்து கிணற்றில் உள்ள திட்டுகளை உயிர் பயத்துடன் பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சிவா என்பவரை துறை சார்ந்த கயிறு மற்றும் கூடை போன்ற உபகரணங்கள் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி உயிருடன் பத்திரமாக மீட்டு அம்மையநாயக்கனூர் காவல் துறையினர் வசம் ஒப்படைத்தனர். கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை உயிருடன் மீட்ட ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.
Next Story