தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி

X
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பல் வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது . அந்த வகையில் பல்லடம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்லடம் வட்டாரத் தலைவர் புண்ணிய மூர்த்தி, மங்கலம் வட்டார தலைவர் சபாதுரை, கனகராஜ், ராமச்சந்திரன் உத்திர மூர்த்தி, அண்ணாதுரை, மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல பல்லடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

