பேருந்து நிலைய வளாகத்தில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மின் தடை- பயணிகள் அவதி.

பேருந்து நிலைய வளாகத்தில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மின் தடை- பயணிகள் அவதி.
பேருந்து நிலைய வளாகத்தில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மின் தடை- பயணிகள் அவதி. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்து குமாரசாமி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் இலவசமாக சிறுநீர் கழிப்பதற்கு கழிப்பிடம் உள்ளது. சிறிய பேருந்து நிலையமாக உள்ளதால் அதிகப்படியான பேருந்துகளும் பயணிகளும் கரூர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதால் இந்த சிறுநீர் கழிப்பிடம் போதுமான இடமாக இல்லாமல் உள்ளது. அதேசமயம் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டண கழிப்பிடமும் சிறுநீர் கழிப்பிடமும் உள்ளது. இதனை நடத்தி வரும் நபர்கள் இலவசமாக சிறுநீர் கழிக்கும் இடத்தில் உள்ள மின்விளக்குகளை அணைத்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சமூக விரோதிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சமூக விரோத செயல்களை அந்த இருளில் செய்வதாகவும் கூறப்படுகிறது. இவை இரண்டுமே சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் செயலாகும். மேலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்த வாய்ப்பை நல்வாய்ப்பாக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. எனவே குற்ற செயல் நடப்பதற்கு முன்பாக மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சிறுநீர் கழிப்பிடத்தில் முறையாக மின்விளக்குகள் எரிவதற்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story