நாகர்கோவில் சந்திப்பு பைபாஸில் நடைமேடை தேவை

X
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய பைபாஸில், இரண்டு தண்டவாளங்களுக்கு நடுவே நடைமேடை அமைக்க வேண்டும் என ரயில்வே துறை அமைச்சரிடம் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் கடிதம் எழுதியுள்ளார். இட நெருக்கடி மற்றும் ரயில் நிறுத்த சிரமங்களைத் தவிர்க்க இந்த நடைமேடை அவசியமாகத் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 650 மீட்டர் நீளத்தில் நடைமேடை அமைக்க எவ்வித தடையும் இல்லை என்றும், ரயில்கள் குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் நிற்கும் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இந்த நடைமேடை அமைக்கப்பட்டால், ஆயிரக்கணக்கான பயணிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் நிவாரணமாக இருக்கும் எனவும், மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story

