அஞ்சல்  பணியாளர்களுக்கு பாராட்டி விருது 

அஞ்சல்  பணியாளர்களுக்கு பாராட்டி விருது 
X
நாகர்கோவில்
குமரி அஞ்சல் கோட்டத்தின் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான கோட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழா. நாகர்கோவில் தனியார் அரங்கில் வைத்து நேற்று நடைபெற்றது.  அஞ்சல் சேவை மக்கள் சேவை என்பதை குறிக்கோளாக கொண்டு இயங்கி வரும் அஞ்சல் துறையின் தலைசிறந்த ஊழியர்களை பாராட்டும் வண்ணம் ஆண்டு தோறும் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டிற்கான விருதுகளை, கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் கண்காணிப்பாளர் க .செந்தில் குமார் வழங்கினார். அவரது தலைமை உரையில் தங்களது தன்னலமற்ற சேவையின் மூலம் பெருவாரியான மக்கள் பயன்பெறும் வண்ணம் கன்னியாகுமரி கோட்டத்தின் அனைத்து ஊழியர்களும் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.  கோட்ட மேன்மை விருதுகள் வழங்கும் விழாவில் நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலக தலைவர்  சுரேஷ் முன்னிலை வகித்தார். நாகர்கோவில் கிழக்கு, நாகர்கோவில் மேற்கு, தக்கலை மற்றும் குழித்துறை உப கோட்ட அதிகாரிகள் உட்பட 250 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story