சாம்பவா்வடகரை கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்

X
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சாம்பவா்வடகரை பேரூராட்சி பகுதியில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றுவதற்கு நோட்டீஸ் வழங்கியும், நேரடியாக பேரூராட்சியின் கூட்டத்தின் வாயிலாக தெரியப்படுத்தியும், கட்சி கொடிக்கம்பங்களை அரசியல் கட்சியினா் தாமாக முன்வந்து அகற்றவில்லை. இதையடுத்து, பேரூராட்சி பணியாளா்கள் சாம்பவா்வடகரை முழுவதும் பொது இடங்களில் அரசியல் கட்சியினரால் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்கள் மற்றும் அதற்கான மேடையையும் அகற்றி, பேரூராட்சிக்கு எடுத்துச் சென்றனா்.
Next Story

