கோவை: கடன் பாக்கிக்காக நண்பரைக் கொலை செய்தவர் கைது !

கோவை: கடன் பாக்கிக்காக நண்பரைக் கொலை செய்தவர் கைது !
X
கோவையில் ரூபாய் 10,000 கடனைத் திருப்பித் தராததால் கட்டிடத் தொழிலாளி ராஜேந்திரன் என்பவரை அவரது நண்பர் நாகராஜ் அடித்துக் கொலை செய்த வழக்கில் நாகராஜ் கைது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த 23-ம் தேதி ராஜவீதியில் உள்ள மாசாணி அம்மன் கோவில் அருகே அவர் பிணமாகக் கிடந்தார். முதலில் குடிபோதையில் இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜேந்திரன் தலையில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், மதுரையைச் சேர்ந்த நாகராஜ் என்பவருடன் ராஜேந்திரனுக்கு நட்பு இருந்தது தெரிய வந்தது. போலீசார் நாகராஜை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். பின்னர் காவல் நிலையத்தில் நடத்திய விசாரணையில், ராஜேந்திரன் தனக்குக் கொடுக்க வேண்டிய 10,000 ரூபாய் கடனைத் திருப்பித் தராததால் ஆத்திரமடைந்து கட்டையால் அடித்துக் கொன்றதை நாகராஜ் ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று மாசாணி அம்மன் கோவில் அருகே நின்றிருந்த ராஜேந்திரனிடம் நாகராஜ் பணத்தைக் கேட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் நாகராஜ் அங்கிருந்த கட்டையால் ராஜேந்திரனின் தலையில் அடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். படுகாயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட நாகராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story