வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மாட்டுச்சந்தையில் இருசக்கர வாகனங்களை கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை பிடித்து சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமைதோறும் மாட்டுச்சந்தை நடைப்பெறுவது வழக்கம், அதன்படி இன்று நடைப்பெற்ற மாட்டுச்சந்தையில், திருப்பத்தூர், கிருஷ்ணிகிரி, ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாடுகளை விற்பனைக்காக கொண்டுவரும் நிலையில் , இந்த மாட்டுச்சந்தையில் பல்வேறு பகுதிகளிலிருந்து மாடுகளை வாங்க வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், தங்ளது இருசக்கர வாகனங்களை அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த போது, இருசக்கர வாகனங்களை இரண்டு பேர் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர், உடனடியாக இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள், இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கி, வாணியம்பாடி நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர், அதனை தொடர்ந்து அந்நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்ட போது, இரண்டு நபர்களும், வேலூர் மாவட்டம் சேம்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் தாமோதரன் என்பது தெரியவந்துள்ளது, உடனடியாக இருவர் மீது வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவர்களிடம் மேலும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் கொள்ளையடிக்க முயன்ற இருவரை பிடித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Next Story

