சோளிங்கரில் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்!

X
சோளிங்கர் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சோளிங்கர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் கோகுல கிருஷ்ணன் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர்கள் சானு, நவநீதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கர நாராயணன் 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். அப்போது கனிம கொள்ளையை தடுக்கும் போதும், கலவரங் களை தடுக்கும்போதும், பேரிடர் காலபணியின் போதும் வரு வாய்த்துறையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.
Next Story

