கோவை: உரிமைக்காக போராடிக்கொண்டே தமிழ்நாட்டை முன் னேற்ற பாதைக்கு தி.மு.க. அரசு அழைத்து செல்கிறது - கனிமொழி !
கோவை முதலிபாளையத்தில் தி.மு.க. மகளிர் அணி கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலம் இருந்தது. ஆனால் இன்று நமது முதல்வர் மகளிருக்கென பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களில் 42 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதுவே திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு சான்றாகும். பா.ஜ.க. அரசு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்ததாகக் கூறுகிறது. ஆனால், உயர் கல்வியில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 30 ஆண்டுகள் முன்னேறி உள்ளது. தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் கல்வி கற்ற பெண்கள் அதிகம். தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. நிதி தர மறுத்தாலும், உரிமைக்காக போராடிக் கொண்டே திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறது என்று அவர் கூறினார்.
Next Story



