இருடியம் வைத்திருப்பதாக கூறி ஆளை கடத்தும் வேளையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது.

இருடியம் வைத்திருப்பதாக கூறி ஆளை கடத்தும் வேளையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது.
இருடியம் வைத்திருப்பதாக கூறி ஆளை கடத்தும் வேளையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது. கரூர் மாவட்டம், தெற்கு காந்திகிராமம்,ராஜா நகரை சேர்ந்த தியாகராஜன் வயது 43 என்பவரை, ஏப்ரல் 23 இல் காலை அவரது நண்பர்கள் பொன்னரசன் வயது 38, தாந்தோணி மலை அசோக் நகை சேர்ந்த சுரேஷ் வயது 41 ஆகியோர் தொழில் விஷயமாக திண்டுக்கல் வரை சென்று வரலாம் என அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் மதியம் 01.00 மணியளவில் தியாகராஜனின் நண்பர் பொன்னரசன், தியாகராஜனின் உறவினரான சிந்தாமணிபட்டி, வரவணை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அஜித் என்பவரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தியாகராஜன் உயிரோடு வேண்டுமென்றால் ரூ15,00,000/- பணம் அனுப்பிவை இல்லையென்றால் அவர் உயிரோடு இருக்க மாட்டார் என கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், அன்று மாலை 5:40 மணிக்கு மேற்படி அஜித் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து கரூர் டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் அஜித்துடன் தொலைபேசியில் பேசிய பொன்னரசனின் தொலைபேசி எண்ணை ஆய்வு செய்ததில் அவர்கள் மதுரை மாவட்டம் கோச்சட்டை Toll Plaza அருகே இருப்பது தெரியவந்ததையடுத்து தனிப்படை விரைந்து சென்று தியாகராஜன் மற்றும் பொன்னரசன் ஆகியோர்களை மீட்டு விசாரணை செய்தனர். இதில் மதுரை மாவட்டம், விளாங்குடியை சேர்ந்த கண்ணன் வயது 42, மதுரை தோடனேரி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி வயது 50, குமார் வயது 46 , சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ரவிக்குமார் வயது 42, மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த சிவகுமார் வயது 38, மதுரை வடக்கு ஆத்திகுளத்தை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை 6-வது பட்டாலினியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் கருப்பசாமி வயது 50 ஆகியோர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை செய்ததில் தியாகராஜன் தரப்பினர் இருடியம் வைத்துள்ளதாக தெரிவித்ததையடுத்து மேற்படி நபர்கள் தியாகராஜன், பொன்னரசன் மற்றும் சுரேஷ் ஆகியோர்களை மட்டும் தனியாக காரில் அழைத்துக் சென்று தியாகராஜனின் உறவினரான அஜித்திடம் பணம் கேட்டு பொன்னரசனை தொலைபேசியில் பேசவைத்துள்ளனர். அதனை தொடர்ந்து அஜீத் என்பவர் மேற்படி சிவக்குமாரின் வங்கி கணக்கிற்கு ரூ.50000/- பணம் அனுப்பியதும் தெரியவந்தது. மேற்படி கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார், போலீஸ் லத்தி 1, இரும்பு ராடு -1, அருவா -2, போலீஸ் ஐடி கார்டு மற்றும் ரூ.5000/- பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. 6 நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவல் பெற்று திருச்சி மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்கள்.
Next Story