ராமநாதபுரம் அய்யனார் கோயில் நாச்சக்காளைக்கு மரியாதை செலுத்தும் விழா

ராமநாதபுரம் அய்யனார் கோயில் நாச்சக்காளைக்கு மரியாதை செலுத்தும் விழா
X
திருவாடானையில் உள்ள எல்லை காவல் தெய்வமான அய்யனார் கோவில் திருவிழாவில் கோயில் நாச்ச காளைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மங்களநாதன் குளம் அருகே உள்ள எல்லை காவல் தெய்வமான அருள்மிகு ஆதினமிளகி அய்யானர் கோவிலுக்கு திங்கள் கிழமை காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கடந்த பல வருங் களுக்கு முன்பு இக்கோயிலுக்கு எருதுகட்டு விழா வெகு விமர்சையாக நடந்து வந்தது. அது பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. இந்த எருதுகட்டு விழா துவங்குவதற்கு முன்பு நாச்சக் காளைக்கு மரியாதை செலுத்தி பின் எருது கட்டு விழா நடைபெறுவது வழக்கம். தற்போது எருதுகட்டு விழா நடைபெறாத நிலையில் ஞாயிற்று கிழமை நாச்சக் காளைக்கு மரியாதை செலுத்தும் விழா மட்டும் நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டனர். திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு ஆதினமிளகி அய்யனாருக்கு சி்றப்பு அபிஷேக ஆராதணை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்று சென்றனர்.
Next Story