கோவை விமான நிலையத்தில் விஜய் - தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு !

X
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, தவெக தலைவர் விஜய் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு திரண்டிருந்த ஏராளமான தவெக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திற்கு வருகை தந்த விஜயை காண, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். வேனின் மீது நின்று, இரு கைகளையும் உயர்த்தி தொண்டர்களை நோக்கி அசைத்து, கும்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொண்டர்கள் வீசிய கட்சி துண்டுகளை தோளில் அணிந்து, புன்னகையுடன் அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். பின்னர், தொண்டர்களை கும்பிட்டவாறு, அவர் தங்கும் நட்சத்திர விடுதியை நோக்கி புறப்பட்டார். விமான நிலையம் முழுவதும் தவெக தொண்டர்கள் சூழ்ந்திருந்ததால், அப்பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது. விஜயின் வருகையால் கோவை விமான நிலையம் விழாக்கோலம் பூண்டது.
Next Story

