கோவை: ரயில் நிலையத்தில் இந்த மக்கள் கட்சி போராட்டம் !

X
கோவை ரயில் நிலையத்தில் நேற்று இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். காஷ்மீர் மற்றும் மேற்கு வங்க அரசுகளை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக் கோரி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ரயில்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெற்றது. காஷ்மீரில் இந்துக்களை பாதுகாக்க கூடுதல் ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றும், இஸ்லாமிய பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற உமர் அப்துல்லா தலைமையிலான அரசு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினர். தீவிரவாத தாக்குதல்களில் இருந்து காஷ்மீரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ரயில் நிலையம் உள்ளே செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால், ரயில் என்ஜின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Next Story

