வெள்ளகோவிலில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
வெள்ளகோவில் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் டி.ராஜலட்சுமி தலைமை தாங்கினார். இதில் மலேரியா நோய்க்கான அறிகுறிகள், பரிசோதனைகள், தடுப்பு முறைகள் ஆகியவற்றை பற்றி விரிவாக எடுத்து கூறப்பட்டது. மேலும் இந்த நோய் நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுக்கள் மூலம் பரவுவதால் சுற்றுப்புறங்களில் தண்ணீரை தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் கதிரவன், சுகாதார நிலைய மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Next Story

